கடலூருக்கு கரம் கொடுக்கும் அதிரை தமுமுக (படங்கள் இணைப்பு)

LMகடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுசா, தமுமுக மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில் மதுக்கூர், அதிரை, பட்டுக்கோட்டை தமுமுக தொண்டர்கள் வீடு வீடாக நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

மேலும் தமுமுக-வினர் கடலூர் மாவட்டத்தில் இலவச மருத்துவ குழு அமைத்து மருத்துவர்கள் மூலம் அந்த பகுதி மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள். மேலும் இவர்கள் கடலூர் மாவட்ட முழுக்க மருத்துவ குழு அமைத்து உதவிகள் செய்து வருகிறார்கள்.மேலும் இந்த மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் அடைந்து வருகிறார்கள் . இவர்களின் இந்த செயலை அல்லாஹ் பொருந்தி கொள்வானாக

Close