அதிரை பிலால் நகர் பகுதியை ஆய்வு செய்த SDPI மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ்

ioஅதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் பிலால் நகர் அருகில் செடியன் குளத்தின் நீர் நிரம்பி அருகில் உள்ள தாழ்வான குடியிருப்புகளில் புகுந்தது. மேலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடுகிறது.

இந்த நிலையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்படைந்த பிலால் நகர் பகுதியை எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ், எஸ்டிபிஐ கட்சி அதிரை நகர தலைவர் முஹம்மது அசாருதீன், செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிப்படைந்து வரும் பிலால் நகர் பகுதியில் வெள்ளம் புகாதவாறு நிரந்தர தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Close