அதிரை இஸ்லாமியரிடம் சென்னையில் ஆட்டோ சவாரிக்கு பணம் வாங்க மறுத்த இந்து மத சகோதரர்!

auto-in-chennai-22-08-2013_0_1_0இன்று சென்னையில் ஆட்டோவில் செல்ல வேண்டிய சூழல். நானும் நண்பரும் ஆட்டோவில் போனோம்.

இறங்க வேண்டிய இடம் வந்தது. ஆட்டோ ஓட்டுனர் பணம் வாங்க மறுத்து விட்டார். “ஏன்ணே..?”
“பாய்மார்கள் இருக்கப்போய்தான் இந்த வெள்ளத்திலிருந்து பிழைத்தோம்”னார்.

‘அண்ணே… அது மனிதனுக்கு மனிதன் செய்யவேண்டிய கடமை;இது ஒரு மார்க்க கடமை., வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தா, இறைவன் தண்டிப்பான் அதான் செஞ்சோம்”னு சொல்லி பணம் கொடுத்தோம்.
அவர் கண்கள் கசிந்தது. நமக்கும்தான்!

சேவைகளை தொடர்வோம், நல்லுங்களை வென்றெடுப்போம்! இன்ஷாஅல்லாஹ்!!

-அதிரை போஸ்ட்

Close