பாபர் மசூதி வழக்கில் ஹாசிம் அன்சாரி விலகவில்லை! பொய்யை வெளியிட்ட விபச்சார ஊடகங்கள்!

இன்று டிசம்பர் 6

இந்தியாவின் மதசார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக அயோத்தியில் கம்பீரமாக நின்று 450 ஆண்டுகள் முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட துக்க நாள்

இந்த சூழலில் பாபர் பள்ளிவாசலின் முத்தவல்லியும் பாபர் பள்ளிவாசல் தொடர்பான வழக்கை தொடுத்தவருமான ஹாசிம் அன்சாரி அவர்கள் அந்த வழக்கிலிருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்தார் என்று இரண்டு தினங்களாக ஊடகங்களில் பரப்பாக செய்திகள் வெளிவந்துள்ளன. பாபர் பள்ளிவாசல் இடத்தில் வைக்கப்பட்டுள்ள ராம் லாலா (குழந்தை ராமர்) விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டதாகவும் இச்செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில் உண்மை நிலை அறிய இன்று காலை நான் ஹாசிம் அன்சாரியின் நெருங்கிய நண்பரும் அயோத்தி -பைசாபாத் முஸ்லிம்கள் சார்பாக பாபர் பள்ளிவாசல் வழக்கில் ஆஜராகும் பைசாபாத்தைச் சேர்ந்த வழக்குறைஞர் காலிக் அஹ்மதை தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு பேசினேன்.
அவர் சொன்னது:

“பெரும்பாலும் வகுப்புவாதமயமாக்கப்பட்டுள்ள இந்தி ஊடகங்கள் ஹாசிம் அன்சாரி அளித்த பேட்டியை திரித்து வெளியிட்டுள்ளன. ஹாசிம் அன்சாரிக்கு தற்போது வயது 96. அவருக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று ஸ்டென்ட் பொறுத்தப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் நான் இந்த வழக்கில் தொடர்ந்து ஈடுபட முடியாது என்றும் என் சார்பில் எனது மகன் இல்யாஸ் இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவார் என்று சொன்னதை ஊடகங்கள் திரித்து அவர் ஒத்துமொத்தமாக வழக்கிலிருந்து விலகி விட்டதாக தவறாக பரப்பி விட்டன.
ராம லாலவை விடுவிக்க வேண்டும் என்று அவர் சொன்னதும் திரிக்கப்பட்டுள்ளது. ராமரை பாபர் பள்ளிவாசலுக்குள் வைத்தார்கள். பிறகு பள்ளிவாசைலை இடித்து விட்டு தார்ப்பைக் கீழ் ராம லாலா சிலை உள்ளது. ராமர் கோயில் பெயரில் விஷ்வ இந்து பரிசத் தலைவர்கள் ஏராளமாக சம்மபாதித்து விட்டார்கள். இது வெறும் அரசியல் இவர்களிடமிருந்து ராம லாலவை விடுவிக்க வேண்டும் என்று அவர் விரிவாக பேசியதை திரித்து வெளியிட்டுவிட்டார்கள்”

வழக்குறைஞர் காலிக் அஹ்மதுவிடம் நான் நடத்திய தொலைபேசி பேட்டி இறைவன் நாடினால் வரும் மக்கள் உரிமை வார இதழில் விரிவாக வெளிவரும்

பைஸாபாதும் அயோத்தியும் இரட்டை நகரமாகும்

படங்கள் 2010ல் நான்அயோத்திக்கு சென்ற போது ஹாசிம் அன்சாரியை அவரது வீட்டில் சந்தித்த போது எடுக்கப்பட்டவை

1. ஹாசிம் அன்சாரி
2. ஹாசிம் அன்சாரி வீட்டில். அருகில் இருப்பவர் எனது நண்பர் டாக்டர் அனீஸ் அஹ்மது
3. ஹாசிம் அன்சாரியின் சிறிய வீட்டிற்கு முன்பு
4. இப்படத்தில் வலது புறம் இருப்பவர் வழக்குறைஞர் காலிக் அஹ்மது

-M.H.ஜவாஹிருல்லா (சட்டமன்ற உறுப்பினர்)

Advertisement

Close