அதிரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

announcement-512

ஞ்சை மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம் வருகிற 12ம்தேதி நடக்கிறது. பொதுவிநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும் தாலுகாதோறும் பொதுவிநியோக திட்டம் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் வருகிற 12ம்தேதி பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம் நடக்கிறது. தஞ்சை தாலுகாவிற்கு குளிச்சப்பட்டு கிராமத்திலும், திருவையாறு தாலுகாவிற்கு கல்யாணபுரம் கிராமத்திலும், ஒரத்தநாடு தாலுகாவிற்கு கீழவன்னிபட்டு கிராமத்திலும், கும்பகோணம் தாலுகாவிற்கு சேசம்பாடி கிராமத்திலும், பாபநாசம் தாலுகாவிற்கு சூழமங்களம் கிராமத்திலும், திருவிடைமருதூர் தாலுகாவிற்கு மணலூர் கிராமத்திலும், பட்டுக்கோட்டை தாலுகாவிற்கு ஏரிப்புரக்கரை கிராமத்திலும், பேராவூரவணி தாலுகாவிற்கு பல்காடு கிராமத்திலும், பூதலூர் தாலுகாவில் இந்தலூர் கிராமத்திலும் ரேஷன்குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இத்தகவலை கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
Close