ஃபேஸ்புக்கீல் முஸ்லிம் மக்களூக்கு எப்போதும் இடம்மூண்டு; மார்க் ஸக்கர்பெர்க்….

mark-zuckerberg-5-970x0மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவரும் அதிபர் தேர்தல் வேட்பாளருமான டோனால்டு டிரம்ப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “முஸ்லிம்களுக்கு ஆதரவான எனது நிலைப்பாட்டை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்ள வேண்டியுள்ளது. பாரிஸ் தாக்குதல் என்னை மிகவும் பாதிக்க செய்தது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களால் மற்ற முஸ்லிம்கள் மீது அதே மாதிரியான பார்வை ஏற்பட்டுவிடும் என்பதே எனது அச்சம்.
யூதரான எனக்கு எனது பெற்றோர்கள் எந்த மதத்தினரையும் தாக்கக் கூடாது என்று அறிவுறுத்தி வளர்த்திருக்கின்றனர். நம் ஒவ்வொருவர் மீதான தாக்குதல்களும் சுதந்திரத்தின் மீதான தாக்குதலே.
நீங்கள் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். ஃபேஸ்புக் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும். அதன் வழியாக நீங்கள் உரிமையோடு உங்களது கருத்தை தெரிவிக்கலாம். அனைவருக்குமான சிறந்த உலகை உருவாக்குவோம்.” என்று குறிப்பிட்டிருந்தார் !

உயர்ந்த குரலில் ஒரு உரத்த சபாஷ் மார்க் ஸ்க்கர் பெர்க்!

Close