அதிரையில் படி படியாக மழைநீர் வடிய துவங்கியது(படங்கள் இனணப்பு)…

IMG_20151211_172016அதிரையில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வந்தது. நேற்று மழை ஓய்ந்த நிலையில் வெயில் அடிக்கத் துவங்கியது. தொடர் மழையால் புதுக்கோட்டை உள்ளுர் செல்லுக்குறிச்சி ஏரி, மழவனிக்காடு ஏரி, ராஜாமடம் ஏரி போண்ற ஏரிகளில் நீர் நிரம்பியது. மேலும் அதிரை பகுதியில் உள்ள குளங்கள் முழுவதும் நீர் நிரம்பி உள்ளன. இந்நிலையில் நேற்று மழை விட்டும் கருங்குளம் நசுவினி ஆறு, ராஜாமடம் ஆறு, ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேற்றுமுன்தினம் பெய்த கனமழையால் , காந்தி நகர், பிலால் நகர் போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்தது. மழை விட்டதால் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழை நீர் வடிய துவங்கியது.
IMG_20151211_172117IMG_20151211_172153IMG_20151211_172206

 

Close