அதிரையில் எழுச்சியுடன் நடைபெற்ற பர்மாவுக்கு எதிரான த.மு.மு.க வின் கண்டன ஆர்ப்பாட்டம்! (படங்கள் இணைப்பு)

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பர்மாவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று, குழந்தைகளை உயிருடன் எரித்தும்,  கற்பிணிப் பெண்களின் வயிற்றில் உள்ள சிசுக்களை எடுத்து கொலை செய்தும், பெண்களை கற்பழித்து கொலை செய்தும் , அவர்களின் வீடுகள், உடமைகள், சொத்துக்களை தீக்கிரையாக்கியும் வருகின்றனர் அந்த நாட்டை சேர்ந்த புத்த மத தீவிரவாத நாய்கள். மேலும் இதனால் பர்மாவில் வசித்து வந்த ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால் எந்த நாடுகளும் இவர்களை அகதிகளாக கூட ஏற்க முன்வரவில்லை.

இதனை அடுத்து இன்று அதிரை பேருந்து நிலையம் அருகே த.மு.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் த.மு.மு.க வின் தஞ்சை மாவட்ட செயலாளர் M.I.பாதுஷா தலைமை தாங்கி சிற்றுரை ஆற்றினார். இதனை அடுத்து த.மு.மு.க வின் மாநில பொதுச்செயலாளர் J.ஹாஜா கனி அவர்கள் கலந்துக்கொண்டு கண்டன உரை ஆற்றினார். 

இதற்க்கு முன்னதாக சுமார் 5.15 மணியளவில் அதிரை தக்வா பள்ளி அருகே ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்வதற்க்காக அணி திரண்ட பொதுமக்களும், த.மு.மு.க நிர்வாகிகளும் பேரணியாக அதிரை பேருந்து நிலையம் வரை நடந்து வந்தனர். 

இந்த பொதுக்கூட்டத்தில் பர்மாவில் முஸ்லிம்களைக் கொள்ளும் புத்த மத தீவிரவாத இயக்கமான 969 என்ற இயக்கத்தை கண்டித்தும் பர்மா அரசைக் கண்டித்தும், இந்தியா அரசு இதனை கண்டிக்க வழியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான அதிரையர்கள் கலந்துகொண்டனர். இதில் நூற்றுக்கும் அதிகமான அதிரையர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கண்டனத்தை வெளிபடுத்தினர். 

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் த.மு.மு.க வின் மாநில பொதுச்செயலாளர் J.ஹாஜா கனி அதிரை பிறை இணையதளத்திற்க்காக அளித்த பிரத்யேக பேட்டி அளித்தார். இது விரைவில் நமது தளத்தில் பதியப்படும்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close