அதிரையில் பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் அமைக்கும் பணி! மீண்டும் துவங்க கோரிக்கை!

opஅதிரை காலியார் தெருவின் பல நாட்களாக கால்வாய் பிரச்சனை இருந்து வந்தது. இதனை அடுத்து இன்று காலை முதல் இந்த கால்வாய் அடைப்பை சரி செய்வதற்காகவும், கழிவுநீர் பாதையை சரி செய்வதர்காகவும் கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி ஜேசிபி எந்திரம் மூலம் பழைய கால்வாய் உடைக்கப்பட்டது.

இன்னும் சில நாட்களில் இதற்கான பணிகளில் நிறைவடையும் என. இதற்காக 6.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் பாதி பணிகளுக்கு மத்தியில் மழை குறுக்கிட்டதால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் கடந்த 03 நாட்களாக மழை ஏதும் பெய்யாத நிலையில் பணியை மீண்டும் துவங்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் சாக்கடை நீர் நடைபாதையில் செல்கின்றது.

எனவே இப்பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்ட புதிய கால்வாய் அமைக்கும் பணியை மீண்டும் தொடருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவர் இன்று காலை அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள புகார் புத்தகத்தில் இப்பதிவை எழுதி வைத்துவிட்டு வந்துள்ளனர்.

Close