சவூதியில் விசா முடிந்த நிலையில் தலைமறைவாக வசிப்பவர்களுக்கு பொதுமன்னிப்பு!

saudiair-640x361சவூதி அரேபியாவில் பணி புரியும் விசா முடிந்த வெளிநாட்டினர், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணி புரியும் வெளிநாட்டினர் ஆகியோருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.

இந்தியாவை சேர்ந்தவர்கள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு 72 மணி நேரத்தில் இந்தியா சென்றுவிடலாம்…

அவர்களுக்கான நிபந்தனை :

1. சவூதியில் எவ்வித குற்ற பின்னணியும் இருக்கக்கூடாது.
2. எந்தவித அபராதமும் நிலுவையில் இருக்கக்கூடாது.
3. நம் செலவில் டிக்கெட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவல்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பியுள்ளது.

ஆகையால் தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Close