அமெரிக்காவில் முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என கூறி பல்பு வாங்கிய டோனால் ட்ரம்ப்!

trump_flicker_face_yessஅமெரிக்காவின் சான்பெர்னார்டினோ நகரில் கடந்த 2–ந் தேதி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 14 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதை தொடர்ந்து அமெரிக்காவில் 2016-ல் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் பதவிக்கு போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப், முஸ்லிம்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் வருவதற்கு எல்லையில் முழுவதுமாக தடை விதிக்கப்பட வேண்டும் என தனது பிரச்சார அறிக்கையில் அழைப்பு விடுத்து உள்ளார். நமது நாட்டு பிரநிதிகள் என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் வரையில், தடையானது நீடிக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.

இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. டொனால்டு டிரம்ப்பின் கருத்து குறித்து சர்வே ஒன்று நடத்தபட்டது இந்த சர்வே என்பிசி மற்றும் வால் ஸ்ட்ரீட் சர்னல் ஆகியவை இணைந்து நடத்தின இந்த சர்வேயில் டோனால்ட் ட்ரம்ப், கூறிய கருத்துக்கு 57 சதவீத அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

25 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர் 18 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

குடியரசு கட்சியினரில் இந்த கருத்துக்கு 42 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 36 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 22 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை.

ஜனநாயகக் கட்சியினர் மத்தியில், இந்த கருத்துக்கு 75 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.11 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 14 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த சர்வே  மூலம் 59 அமெரிக்கர்கள் முஸ்லீம்களுக்கு ஆதரவாகவும் 29 சதவீதம் பேர் எதிராகவும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Close