வீடு புகுந்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு !!!

theftபட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன்கோட்டையில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் நடராஜனின் வீடு உள்ளது. இவரது குடும்பத்தினர் கடந்த வாரம் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தனர்.இந்நிலையில் சில நாள்களுக்கு முன் இரவு நேரத்தில் நடராஜன் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அலமாரியிலிருந்த வெள்ளிப் பொருள்கள், பட்டுப்புடவைகள், ரூ. 3,000 ரொக்கம் என சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்றனர். இதுகுறித்தப் புகாரின் பேரில் பட்டுக்கோட்டை குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Close