Adirai pirai
Dr.Pirai

Dr.Pirai-உடல் சூட்டை தணிக்கும் இயற்கை உணவுகள்!!!

dr.pirai_உடலில் நீர் வறட்சி ஏற்படுதல், காற்றோட்டம் இல்லாத இடங்களில் இருப்பது, அதிக வெப்பதில் அலைவது, கூட்ட நெரிசலான இடத்தில் இருப்பது போன்றவற்றின் காரணமாக உடலில் சூடு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல் சூடு ஏற்படலாம்.தினசரி சரியான அளவு நீர் பருகி வந்தாலே உடல் சூட்டை சரி செய்துவிட முடியும். ஆயினும் சிலரது உடலுக்கு வெறும் நீர் மட்டும் தீர்வளிப்பது இல்லை. அவர்கள், இளநி, பழரசம் போன்றவற்றை பருகி வருவதோடு சேர்த்து சில இயற்கை உணவுகளை அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொண்டால் நல்ல தீர்வுக் காண முடியும்.
வெங்காயம், வெந்தயம்: வெங்காயம், வெந்தயம், தக்காளி ஆகிய மூன்றையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால் உடல் சூடு குறைந்து உடல் குளிர்ச்சியடையும்.11-1449832464-naturalfoodstoreducebodyheat1தாமரை இதழ்கள்: தாமரை பூ இதழ்களை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, கொஞ்சம் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு குறைந்துவிடும்.LotusFlowerஆட்டுப் பால்: ஆட்டுப்பாலை தினமும் பருகி வந்தால் உடல் சூட்டை விரைவாக குறைத்து விடலாம்.11-1449832444-naturalfoodstoreducebodyheat3
ரோஜாப் பூ:ரோஜாப்பூ இதழ்களை நீரில் ஊறவைத்து, சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும் என இயற்கை மருத்துவ முறைகளில் கூறப்பட்டுள்ளது.11-1449832450-naturalfoodstoreducebodyheat4நெல்லிக்காய் சாறு: நெல்லிக்காய் சாற்றை தினமும் குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.11-1449832456-naturalfoodstoreducebodyheat5

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy