சவூதி உள்ளாட்சித் தேர்தலில் 13 பெண் வேட்பாளர்கள் வெற்றி!!!

sa-lgflagசவூதியில் சனிக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 13 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.சவூதியில் முடியாட்சி நடைபமுறையில் உள்ளது. அங்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.
சவூதி வரலாற்றில் முதல் முறையாகப் பெண்கள் அந்தத் தேர்தலில் பங்கேற்றனர். அவர்கள் வாக்களித்ததுடன், உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர் பதவிக்காகப் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இதில் 13 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக சவூதி தேர்தல் ஆணையர் ஒசாமா அல்-பார் அறிவித்தார். இது குறித்து அரசு செய்தி நிறுவனம் எஸ்.பி.ஏ. தெரிவித்ததாவது:
முஸ்லிம்கள் மிகப் புனிதமாகக் கருதும் மெக்கா நகரில் உள்ள மத்ராக்கா கவுன்சில் தொகுதியில் போட்டியிட்ட சல்மா பிந்த் அல்-உடேபி வெற்றி பெற்றார்.அவருக்கு எதிராக 2 பெண் வேட்பாளர்களும் 7 ஆண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர் என்று அச்செய்தி நிறுவனம் தெரிவித்தது.இதை தவிர ஜெட்டா, அல்-ஜாவஃப், தபூக், இஷா உள்ளிட்ட பகுதிகளில் பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
பச்சிளம் குழந்தைகளுக்கான காப்பகம், விளையாட்டரங்கம் அமைப்பது, கழிவு அகற்றம் ஆகியவை குறித்து அளித்த வாக்குறுதிகளை முன்வைத்துப் பெரும்பாலான பெண்கள் போட்டியிட்டனர். சில மாதங்களுக்கு முன்னர் காலமான சவூதி மன்னர் அப்துல்லா, உள்ளாட்சி அமைப்பகளுக்கான தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதற்கான அரச கட்டளையை 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார்.
அதற்குப் பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சித் தேர்தல் இதுதான்.

Close