மனதை வருடிய நிகழ்வு!!

இது  இன்று காலையில்  எடுக்கப்பட்ட புகைப்படம்.

நான் இன்று (2.12.2014) காலை  வயது முதிர்ந்த ஒருவரை  கண்டேன் மன்னிக்கவும் சிறு திருத்தம் தோற்றத்தில் தான் அவர் முதியவர் தெரிந்தார் ஆனால் உழைப்பில் இன்றைய இளைஞர்களுக்கு இணையாக உள்ளவர்.

 அவரின் மூன்று சக்கர மிதிவண்டி நிரம்ப பொருட்களுடன் அவர் சாலையில் வளம் வந்து கொண்டிருந்தார். முதுமையிலும் உழைக்கும் இவர்களை போன்ற பெரியவர்களுடன் தான் சிலர் பேரம் பேசுவாங்க அதே லாரி, டெம்போ போன்ற நவீன வாகனத்தில்  பொருள  ஏத்திட்டு வந்தால் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுகின்றனர். இவர்களுக்கு உதவுங்கள் என்று  சொல்வில்லை இவங்களுக்கு கொடுக்க வேண்டியது முறையா கொடுப்பது நல்லது. 

முறையாக பணம் கொடுக்கும் ஒரு சிலரை நான் பார்த்ததுண்டு அதே போல் முறையற்று பேசுவதும் தரக்குறைவாக நடத்துவதுடன் பணத்தை மிகவும் குறைவாக கொடுக்க கூடியவர்களும் நான் பார்த்ததுண்டு. இவர்களை போன்ற உழைப்பாளிகளை மதித்து நடப்போமாக.

-அதிரை சாலிஹ் 

Advertisement

Close