டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை!!!

pointofsale_jobsபவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 81 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நர்தெர்ன் ரீஜியன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்-மி பிரிவு பணிகளுக்கு 44 இடங்களும், ஜூனியர் ஆபீஸர் டிரெயினி பணிக்கு 4 இடங்களும், ஜூனியர் டெக்னீசியன் டிரெயினி பணிக்கு 27 இடங்களும், அசிஸ்டன்ட் பணிக்கு 6 இடங்களும் உள்ளன. கல்வித்தகுதிகள், வயது தகுதிகள், வயது வரம்பு தளர்வுகள், தேர்வு செய்யப்படும் முறைகள், விண்ணப்பக்கட்டணம் போன்ற கூடுதல் தகவல்களுக்கு www.powergridindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கப்பல் பழுதுபார்க்கும் தளத்தில் 151 பணியிடங்கள்:
போர்ட் பிளேயர் நேவல் கப்பல் பழுதுபார்க்கும் தளத்தில் 151 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 46 டிரேட்மென் மேட் உள்பட மெசினிஸ்ட், பைப் பிட்டர், ரெப்ரிஜிரேட்டர் அண்ட் ஏர் கண்டிஷன் பிட்டர், வெல்டர், பெய்ண்டர், என்ஜின் பிட்டர், எலக்ட்ரானிக் பிட்டர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 151 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்ப தாரர்கள் 18 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியோடு டாக்யார்டு அப்ரண்டிஸ் பயிற்சி பள்ளியில் பெற்ற என்.ஏ.சி சான்றிதழ் அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தில் என்.ஏ.சி சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் பணி வாரியான கல்வி தகுதிகள், வயது வரம்பு தளர்வுகள், விண்ணப்பிக்கும் முறை, மாதிரி விண்ணப்பபடிவம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை டிசம்பர் 5-11 தேதியிட்ட எம்ப்ளாய்ண்மென்ட் இதழில் பார்க்கவும்.

Close