இஸ்லாமியர்களுக்கு ஆதரவு குரல் கொடுக்கும் கூகுல், பேஸ்புக்!

Google-CEO-Sundar-Pichaiஇஸ்லாமியர்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறியது உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது.

இந்நிலையில் உலகின் முன்னனி தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் தலைமை நிர்வாகியும் தமிழகத்தை சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை இஸ்லாமியர் உட்பட சிறுபான்மையினருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமூகவலை தளமான ‘மீடியம்’- இல் சுந்தர் பிச்சை எழுதியுள்ள கடிதத்தில் “ நான் 22 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தேன். அதிர்ஷ்டவசமாக இங்குள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்தது. கடினமான உழைப்பாளிகளுக்கு எப்போதுமே அமெரிக்கா தனது கதவுகளை திறந்தே வைத்துள்ளது. நான் எனது பணி, குடும்பம் என அனைத்தையும் அமெரிக்காவிலேயே அமைத்துக்கொண்டேன்.

இலட்சக்கணக்கான தடைவகள் சொல்லப்பட்டது போல அமெரிக்கா ‘வாய்ப்புகளுக்கான இடம்’. ஆனால் இதுவெறும் வாய்ப்புகளுக்கான இடம் மட்டுமில்லை. அமெரிக்கா திறந்த மனதும், சகிப்புத்தன்மையும், அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் பண்பும் கொண்ட நாடு. இவைதான் அமெரிக்காவின் பலமும் குணமும் ஆகும்.

பயத்தினால் நமது மதிப்பீடுகளை தோற்கடிக்க அனுமதிக்க வேண்டாம். நாம், அமெரிக்காவிலும், உலகம் முழுவது உள்ள இஸ்லாமியர்களுக்கும் மற்ற சிறுபான்மையினருக்கு ஆதரவளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இது போன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் இஸ்லாமியர்களை ஆதரித்து கருத்து பதிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Close