மெக்காவில் சில தினங்களுக்கு முன் பெய்த மழையில் வானத்தில் குதிரை பறந்ததா?

 

உலக முஸ்லிம்களின் புனித பூமியான மக்கா நகரின் எல்லையில் மழை பொழிந்ததாகவும் அப்பொழுது வானத்திலே குதிரை ஒன்று பறந்ததாக சமூக வலைத்தளங்கள் வழியாகவும்  வாட்ஸ் ஆப் வழியாகவும் ஒரு வீடியோ ஒன்று வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இது வதந்தீ ஆகும்.

இது இன்று வெளியிடப்பட்ட வீடியோ அல்ல, இது மூன்று ஆண்டுகளுக்கும் முன்பாக சில பெறால் ஜோடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ….

முஸ்லிம்களின் ஈமானை நேரடியாக சீர்குலைக்க முடியாத சில பேர் , முஸ்லிம்களின் ஈமானை சிதைப்பதற்கு நிறைய ஷைத்தானிய வேலைகளை செய்து வருகின்றனர்.

நாம் தொழக்கூடிய முஸல்லாவில் உருவத்தை பதிப்பது, மக்கா எல்லையில் குதிரை பறப்பது போன்று ஷைத்தானிய வேலைகளை செய்து முஸ்லிம்களின் ஈமானை பலகீனப்படுத்தும் வேலைகளை செய்துள்ளனர்.

திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் வார்த்தைகளில் குதிரை பறப்பது பற்றி எவ்வித முன்னறிவிப்பும் இல்லை.

திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய இரண்டை தவிர வேறு எதுவும் இஸ்லாம் அல்ல என்ற தெளிவான கொள்கையில் இருந்தால் இது போன்ற போலிகள் முஸ்லிம்களின் ஈமானை ஒருபோதும் எடை போட முடியாது.

அதன் பொய்யான விடியோவை இங்கே பார்க்கவும்.

Advertisement

Close