அதிரையில் வங்கிகள் இயங்கவில்லை!

தமிழகம், புதுவை உள்ளிட்ட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்கின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மும்பையில் இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகளுடன் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து தமிழகம், புதுவை, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறினார். 

ஊதிய உயர்வு விகிதத்தில்தான் பிரச்னை “ஊதிய உயர்வை கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் முதல் செயல்படுத்த இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். எனினும், ஊதிய உயர்வு விகிதத்தை 23 சதவீதத்திலிருந்து ஓரளவு குறைத்துக் கொள்வதாக திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊழியர் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியபோதிலும், 11 சதவீத ஊதிய உயர்வுதான் அளிக்க முடியும் என்ற பழைய நிலைப்பாட்டிலிருந்து மாற முடியாது என நிர்வாக அமைப்பினர் கூறி விட்டனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது” என்றார் சி.எச். வெங்கடாசலம்.

இந்த வேலை நிறுத்ததிற்கு ஆதரவு தெரிவித்து அதிரையிலும் வங்கி  ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இடுப்பட்டனர்.

                                                                                                                                  -file image

Advertisement

Close