மல்லிப்பட்டினத்தில் இருந்து தப்பிய சிறுவன்! அதிரைக்கு வந்தானா???

kanamமல்லிப்பட்டினத்தை சேர்ந்த சிறுவன் சுல்தான் இப்ராஹிம். மனநிலை பாதிக்கப்பட்டவன். ரோஸ் வண்ண டீ சர்ட்டும், நீல நிற கைலியும் அணிந்திருந்தான். இச்சிறுவன் நேற்று காலை மல்லிப்பட்டினத்தில் இருந்து அதிரைக்கு செல்லும் SRM பேருந்தில் ஏறியுள்ளான். அந்த சிறுவன் தான் செந்தலையில் உள்ள தன்னுடைய தந்தையின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளான். ஆனால் அவனை இன்னும் காணவில்லை. அவன் அதிரையில் இறங்கியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் சுரைக்காய் கொள்ளை பகுதியில் சுற்றிக்கொண்டிருந்ததாக நமது அதிரை பிறைக்கும் ஒரு வாசகர் தொலைப்பேசி மூலமாக தகவல் தெரிவித்தார். நாம் நேரில் சென்று பார்க்கும் போது அந்த சிறுவனை காணவில்லை. அந்த சிறுவனை யாராவது காணநேர்ந்தால் கீழே உள்ள எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இது குறித்து மல்லிப்பட்டினத்தை சேர்ந்த நமது வாசகர் ஒரு வாட்ஸ் அப்பில் நமக்கு அனுப்பி ஆடியோ பதிவு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

95244283356, 8675181174, 8220075460

Close