சென்னை விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!!!

1சென்னையிலிருந்து பாங்காங்கிற்கு விமானத்தில் ரூ.19 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் கடத்த முயன்ற இரண்டு பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இன்று காலை, சென்னையில் இருந்து பாங்காங்கிற்கு விமானம் புறப்பட இருந்தது. அப்போது, அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது மறைத்து வைக்கப்பட்டிருந்து ரூ.19 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக, குருபஜன்சிங், ஜென்பகதூர் எனும் இருவரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடமிருந்து கரன்சிகளை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Close