அமெரிக்க ஹெச்-1பி விசாவுக்காக மீண்டும் கூடுதல் கட்டணம்!!!

yl07zkigzezvrnxwvdunஅமெரிக்காவில் ஹெச்-1பி மற்றும் எல்-1 வகையிலான நுழைவு இசைவு (விசா) பெற்றுப் பணிபுரியும் ஊழியர்களைக் கொண்ட இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீண்டும் 2,000 டாலர் (ரூ.1.34 லட்சம்) கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகி வருகிறது.இந்தத் திட்டம் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், அதனை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அமெரிக்க வர்த்தக மையக் கட்டடங்கள் மீது கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி விமானங்களை மோதவிட்டு, பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கவும், மறுவாழ்வுக்கான சிகிச்சை அளிக்கவும் ஏதுவாக நிதி திரட்டும் வகையில், சிறப்புச் சட்டம் ஒன்றை கடந்த 2009-ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு இயற்றியது.
இதன்படி, ஹெச்-1பி மற்றும் எல்-1 வகையிலான விசாக்களைப் பெற்று பணிபுரியும் 50 சதவீத ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள், அமெரிக்க அரசுக்கு கூடுதல் சிறப்புக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டத..இந்தச் சட்டத்தின் தாக்கம், பெரும்பாலும் இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்துவதாக அமைந்தது.இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்திய நிறுவனங்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.468 கோடி முதல் ரூ.535 கோடி வரை கூடுதல் கட்டணம் செலுத்தியுள்ளன என்று நாஸ்காம் (மென்பொருள் நிறுவனங்களின் கூட்டமைப்பு) தெரிவிக்கிறது இந்தச் சூழலில், அத்திட்டம் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அதனை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

Close