அதிரை சி.எம்.பி.லேன் சாலைக்கு பிறந்தது விடிவுகாலம்! 10.40 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணி துவக்கம்! (படங்கள் இணைப்பு)

cmpஅதிரை வண்டிப்பேட்டை முதல் V.K.M.ஸ்டோர் செல்லும் சி.எம்.பி.லேன் யூனியன் சாலை கடந்த பல வருடங்களாக சிதைந்த நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இது குறித்து பல்வேறு கோரிக்கைகள் புகார்கள் வழங்கப்பட்டது. இருப்பினும் இது அதிரை பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தினால் இந்த சாலை அமைக்கும் பணி துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த சாலை அமைக்கும் பணி இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இது குறித்து அதிரை அ.தி.மு.க நகர துணை செயலாளர் தமீம் அவர்கள் நம்மிடம் கூறியதாவது ” இந்த யூனியன் சாலையை அமைப்பதற்கு அதிரை அதிமுக சார்பாக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இந்த முயற்சிகளுக்கு பயணளிக்கும் விதமாக இந்த சாலை அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டது. இதில் 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று காலை முதல் இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஜெ.சி.பி எந்திரம் மூலம் பழைய சாலையை பெயர்த்து எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் புதிய சாலை அமைக்கப்படும் எனவும், அதன் பின்னர் இந்த சாலை மினி பேருந்துகள் செல்லும்” எனவும் கூறினார்

Close