பேராவூரணியில் வங்கி கணக்கை கேட்டு நூதன பண மோசடி!!!

imagesபேராவூரணியில் வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ.5 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.பேராவூரணி பொன்காடு பகுதியைச் சேர்ந்தவர் கே.காதர்மஸ்தான் (63). ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளரான இவர் அப்பகுதியிலுள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ளார்.இந்நிலையில் இவரை கடந்த சனிக்கிழமை மர்மநபர் ஒருவர் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு, அவர் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் வங்கியின் மேலாளர் பேசுகிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் தங்களது ஏ.டி.எம். அட்டையைப் புதுப்பிக்க வேண்டும். அட்டையில் உள்ள எண்ணை கூறுங்கள் எனக்கேட்டுள்ளார்.

இதனை நம்பிய காதர்மஸ்தான் ஏ.டி.எம். அட்டையின் எண்ணைத் தெரிவித்துள்ளார். சற்று நேரத்தில் இவரது செல்லிடப்பேசிக்கு வங்கி கணக்கிலிருந்து ரூ.5 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த காதர்மஸ்தான் உடனடியாக மும்பையில் உள்ள வங்கியின் தலைமையகத்துக்கு தொடர்பு கொண்டு வங்கி கணக்கை முடக்குமாறு கூறிவிட்டார்.இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு சென்று விவரம் கேட்டதற்கு அதுபோன்று வங்கியில் இருந்து யாரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை என விளக்கம் தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற அழைப்புகளை தவிர்க்கவும் அறிவுறுத்தினர்.

Close