அதிரை பேபி ஜுவல்லரியில் உரிமையாளரிடம் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை முயற்சி! பட்டப்பகலில் பயங்கரம்! (படங்கள் இணைப்பு)

அதிரை ஆஸ்பத்திரி தெரு பேபி ஜுவல்லரி உரிமையாளர் சேகர். இவர் தினசரி இரவு கடையை அடைத்துவிட்டு நகைகளை வீட்டுக்கு எடுத்து செல்வதும் மீண்டும் காலை நகைகளுடன் வந்து கடையை திறப்பது இவரின் வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை 10மணியளவில் இவர் கடையை திறக்க முற்படும் போது பயங்கர ஆயுடங்களுடன் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அவரின் நகை பையை கொள்ளையடிப்பதற்க்காக பிடுங்கியுள்ளனர். சுதாரித்துக்கொண்ட சேகர் நகைப்பையை நழுவி விடாமல் பிடித்துக்கொண்டு அருகில் உள்ளவர்களை அழைத்து சத்தம் எழுப்பியுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் திருடர்களை பிடிக்க முயற்சிக்கும் போது ஆயுதங்களை காட்டி மிரட்டி விட்டு ஓடிவிட்டனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மக்கள் பரபரப்பாக காணப்படும் பகுதியில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த திருட்டு முயற்சி சாமானிய மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 6 மாதத்திற்கு முன்னர் பேபி ஜுவல்லரி உரிமையாளர்களிடம் இது போல் நகை பையை கொள்ளையடிக்க கொலை வெறித்தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


களத்திலிருந்து :காலித் அஹ்மத்  

Advertisement

Close