ஊட்டியில் பனி காலம் தொடங்கியது: 4 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை குறைவு!!!

dsc05114நீலகிரி மாவட்டத்தில் மழைகாலம் முடிவடைந்து தற்போது பனிகாலம் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழையால் பனி காலம் தாமதமாக ஆரம்பித்துள்ளது.அவலாஞ்சி, எமரால்டு, அப்பர் பவானி ஆகிய பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியசாக இருந்தது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்சம் 17 டிகிரி செல்சியசாகவும் நிலவியது.

பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலும் இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவும் வாட்டுகிறது. தலைகுந்தா, படகு இல்லம், குதிரைபந்தய மைதானம் ஆகிய இடங்களில் உள்ள புல்வெளிகள் வெண்பட்டாடை உடுத்தியது போன்று பார்க்க ரம்யமாக உள்ளது. நடைபயிற்சிக்கு செல்பவர்கள் கடுங்குளிரால் அவதிப்பட்டனர். பனி காலம் தொடங்கியுள்ளதால் தேயிலை மற்றும் மலைக்காய்கறிகள் கருகும் நிலை உருவாகி உள்ளது. தேயிலையை காக்க விவசாயிகள் இலை, சருகுகளை தேயிலைச்செடிகள் மீது போட்டு பாதுகாத்து வருகிறார்கள். அரசு தாவரவியல் பூங்காவில் மலர்ச்செடிகள் மீது பிளாஸ்டிக் கவர்கள் போட்டு போர்த்தியுள்ளனர். கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Close