வேட்டு வைக்கும் ஓசி வை-பை..!!

images (2)இன்றைய ஸ்மார்ட்போன் பயனாளிகள் இண்டர்நெட் இல்லாமல் ஒரு நொடியும் இருப்பதில்லை. இன்றைய இளைஞர்கள் வெளியில் எங்கு சென்றாலும் அவர்கள் கேட்கும் முதல் கேள்வியாக இருப்பது வைஃபை பாஸ்வேர்டு தான் என்றே கூறலாம். அவ்வாறு வை-பை மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவோரா நீங்கள், உங்களை எச்சரிக்கை செய்யும் தொகுப்பு தான் இது. பொது இடங்களில் வை-பை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை மற்றும் தீமை குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைன் பேங்கிங்: பொதுவாக வங்கி சார்ந்த பணிகளை பொது வை-பை மூலம் பயன்படுத்தினால் உங்களது எவ்வித தகவல்களுக்கும் பாதுகாப்பே கிடையாது. பொது வை-பை என்க்ரிப்ட் செய்யப்படாததே இதற்கு முக்கிய காரணம்.08-1449580137-01இண்டர்நெட்:ஆன்லைன் சார்ந்த வங்கி மற்றும் முக்கிய பணிகளை மொபைல் டேட்டா அல்லது சொந்த இண்டர்நெட் மூலம் பயன்படுத்துவது உங்களுக்கு நல்லது.08-1449580152-02வேகம்: நீங்கள் ஒப்பு கொள்ளவில்லை என்றாலும் இது தான் உண்மை. பொது வை-பை கனெக்ஷன்களை விட உங்களது மொபைல் டேட்டா அதிக வேகமானது என கண்டறியப்பட்டுள்ளது.08-1449580166-03பாதுகாப்பு :ஒரு வேளை உங்களது கருவியில் போதுமான பாதுகாப்பு இல்லை எனில் உங்களது தகவல்கள் திருட்ப்படுவதோடு அதுவே உங்களுக்கு ஆபத்தாகவும் அமைந்து விடும்.08-1449580180-04
அப்டேட்: கருவியில் பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்க மென்பொருள் அப்டேட்களை தவறாமல் செய்வது நல்லது.08-1449580194-05பொது வை-பை :அதிகப்படியாக பொது வை-பை பயன்படுத்தும் போது கவனமாக இருப்பது நல்லது. தொடர்ச்சியாக பொது வை-பை பயன்படுத்துவோர் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் வங்கி சார்ந்த சேவைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இவ்வாறு செய்யும் போது உங்களது தகவல்களோடு பணமும் பறிபோக அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.08-1449580208-06மென்பொருள்: பொது வை-பை மூலம் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்வது மால்வேர் சார்ந்த தாக்குதல்களுக்கு வழி செய்யும். இவ்வாறான மால்வேர்கள் உங்களது கருவிக்கு பேராபத்தாக அமையும். இதனால் பொது வை-பை கொண்டு மென்பொருள்களை இன்ஸ்டால் செய்வது, மென்பொருள் அப்டேட் போன்றவைகளை மேற்கொள்வது கருவியை பாழாக்கி விடும்.08-1449580223-07

Close