அதிரை மாணவன் அப்பாஸ் மாநில கால்பந்து அணிக்கு தேர்வு! காதிர் முஹைதீன் பள்ளியின் அடுத்த மைல்கல்!

abbas2015-16 ஆம் ஆண்டிற்கான ராஜுவ் காந்தி கேல் அபியான் திட்டத்தின் கீழ் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஊரக கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில், தமிழக அணி சார்பாக கலந்து கொள்ளும் பொருட்டு மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் 16-12.2015 புதன் கிழமை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

அதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் 150 பேர் கலந்து கொண்டணர். தஞ்சாவு+ர் மாவட்டம் சார்பாக 2 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அதில் நம் பள்ளி மாணவர் A முகம்மது அப்பாஸ் த/பெ. அப்துல் ஷுக்கூர்  XI E தேர்வு செய்யபட்டு மாநில அளவிலான தேர்வு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார்

Close