ஹிஜாப் – பார்வைக்கா? பாதுகாப்புக்கா?

hijab
இன்றைய நவீன யுகத்தில் ஹிஜாபின் நோக்கம் அலங்காரமாக அடையாளப் படுத்தப்பட்டு வருகின்றது , இது மேற்கத்தியவர்களின் சதி , சூழ்ச்சி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை . இஸ்லாம் பெண்கள் வெளியில் செல்லும் பொழுது தமது அழகுகளையும் , அலங்காரங்களையும் மறைக்குமாறு கட்டளையிடும் அதே வேளயில் எமது பெண்கள் இவற்றில் பொடுபோக்காகவும் , அலட்சியமாகவும் நடந்துகொள்கின்றனர் . இன்று ஹபாயாக்கள் விதம் விதமாக தயாரிப்பாகி சந்தையில் , கடைகளில் விற்பனையாகின்றன .. பார்ப்பவர்களின் பார்வைகளை சுண்டி இழுக்கும் வண்ணம் அமைந்திருப்பது தான் மன வருத்தம் தருகின்றது .

இவற்றை அணிவதும் ஒன்றுதான் ஆடையின்றி நிர்வாணமாக ,பிறந்த மேனியுடன் வெளியில் செல்வதும் ஒன்று தான் , ஏனெனில் இவற்றை அணிவதால் பெண்ணின் ஒவ்வொரு அவயவங்களும் பார்ப்பவர்களுக்கு அவற்றின் அளவுகளோடு படம் பிடித்து காட்டுகின்றன. * இறுக்கமான , ஒட்டிய ஹபாயாக்கள் … இதனால் இப்பெண்கள் மற்றவர்களை விபச்சாரத்திற்கு ஆளாக்குகின்றனர் . * இரு புறங்களிலும் வெட்டிய designs …

ஹபாயா என்பது முழுக்க மறைக்க உள்ள ஒரு இஸ்லாம் ஏவிய ஆடை முறை

* ஹபாயா முழுவதும் மின்னும் designs ,ஆனால் இன்று அந் நோக்கம் திசை மாறி இருப்பதை எல்லோராலும் அவதானிக்க முடிகின்றது , வெட்டப் பட்டிருக்கும் பகுதிகளில் அவளது அழகு, கால்கள் தென்பட்டு ஏனையோரை பாவத்திற்கு உள்ளாக்குகின்றாள் பெண்ணில் பால் பார்வைகளை பறிக்கும் அலங்காரங்கள் …

இவற்றை தைப்பவர்கள் , ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள் , கடைகளில் விற்பனை செய்பவர்கள் , அதனை தம் மனைவிக்கு , பிள்ளைகளுக்கு , சகோதரிகளுக்கு வாங்கிக் கொடுப்பவர்கள் , அத்தோடு இவற்றை அணிந்து வெற்கமின்றி வெளியில் உலாவும் பெண்கள் அனைவருக்கும் இப்பாவம் வந்து சேரும் ஹபாயா இன்று அலங்காரங்கள் , designs நிறைந்ததாக காட்சியளிப்பது , இஸ்லாம் விதித்துள்ள சட்ட விதி முறைக்கு முரனானது . அதாவது விபச்சாரத்திற்கு உடந்தையாக ,உதவியாக இருந்த குற்றம் நிச்சயமாக அனைவரையும் வந்து சேரும் . # எனவே அனைவரும் இவ்விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் #

ஆக்கம் : அஸ்ஹான் ஹனீபாவல்லவன் அல்லாஹ் எமது பெண்களை இவ்வாறான இழிவான செயலில் இருந்து பாதுகாப்பானாக . ஆமீன்.

Close