அதிரையில் உலக சாதனைக்காக 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்! (படங்கள் இணைப்பு)

தஞ்சை மாவட்டத்தில் மழைப்பொழிவை அதிகரிக்கவும், பசுமைப்பரப்பை அதிகரிக்கவும் முதல்கட்டமாக 30 லட்சம் மரக்கன்றுகள் இன்று மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், காவல் நிலையங்கள்,அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் பல பொது நிறுவனங்கள் அலுவலகங்கள், சாலைய்யோரங்களில் மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்று வருகின்றது.

தஞ்சை மாவட்டத்தில் மழை அளவு குறைவாக உள் ளது. வனப்பகுதி 6 சதவீதம் மட்டுமே உள்ளது. வனப்பகுதி பரப்பளவை அதிகரிப்பதன் மூலம் மழை பொழிவை அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உய ரவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் இம்மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஊருக்கு ஒரு குளம், ஒருவருக்கு ஒரு மரம் என்பதன் அடிப்படையில் 25 லட்சம் மக்கள் தொகை கொண்ட தஞ்சை மாவட்டத்தில் 25 லட்சம் மரம் என்ற இலக்கை கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தை பசுமை தஞ்சை மாவட்டமாக மாற்றவும், உலக கின்னஸ் சாதனை முயற்சியாகவும், ஒரே நாளில் 30 லட்சம் மரக்கன்றுகள் நட 14 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 43 ஊராட்சிகளில் 23 எக்டேர் பரப்பளவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகள் 6 ஆயிரம் பேர் மூலம் 30 லட் சம் மரக்கன்றுகளுக்கான நாற்றங்கால் நர்சரி உருவாக்கிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வகை யான பழ வகைகள், தென்னை மரங்கள், நிழல் தரும் மரங் கள், நீரை குறை வாக உறிஞ் சும் மரங்கள், அழகு மரங்கள், பேட்மிட் டன் பால் மரம், அயல் வாகை, பென்சில் மரம், குமிழி தேக்கு, மயில்கொன்றை பூ, புளி, வேம்பு, புங்கன், இலுப்பை மரங்கள் நடப்பட உள்ளன. 

 அதிரையை பொருத்தவரை காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை, காவல் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது. இதில் பெரூராட்சி தலைவர் அஸ்லம், பேரூராட்சி துணை தலைவர் பிச்சை 21 வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர், சமுக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் இம்மரக்கன்றுகள் அதிரையில் உள்ள 21 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கும்  இம்மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளது. அதிரையில் மட்டும் மொத்தம் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இதனால் அதிரை உட்பட தஞ்சை மாவட்டம் முழுவதும் ‘பசுமை தஞ்சை‘ மாவட்டமாக மாற்றப்படும்.

Advertisement

Close