குவைத்தில் கொடுமைபடுத்தப்பட்ட அதிரை இளைஞர் த.மு.மு.க உதவியில் தாயகம் திரும்பினார்!

அதிராம்பட்டினத்தை சேர்ந்த ராஜேஷ் Bsc ஒரு பட்டதாரி ஆவார் வீட்டின் கஷ்ட நிலையை போக்க வெளி நாடு செல்ல திட்டமிட அசிஸ்டன்ட் சூப்பர்வைசர் வேலைக்காக குவைத் நாட்டிற்கு ஒரு கம்பெனிக்கு வந்தார்.. வந்த இடத்தில் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

குவைத் நாட்டிற்கு வந்ததும் அவரது முதலாளி ராஜேஷை அழைத்து சென்று மற்றொருவருடன் விட்டு விட்டு இங்கு தான் வேலை பார்க்க வேண்டும் என சொல்லியுள்ளார் . அங்கு அவருக்கு கூடாரம் அமைக்கும் வேலையும் அது போக மாடு ஒட்டகத்திற்கு தீனி போடும் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. என்ன செய்ய நம் தலைவிதி கடன் வாங்கி வந்துள்ளோம்.

எப்படியும் சமாளிப்போம் என்று நினைக்கையில் பழைய முதலாளி தினசரி வேலை நடக்கும் இடத்திற்கு வந்து. இவரை அழைத்து அருகே உட்கார வைத்து சிகரெட் குடித்து முடித்த பின்பு ராஜேஷின் கையை நீட்ட சொல்லி அணைப்பாராம்

இந்த கொடுமையை தம்மால் தாங்க முடியாது என நினைத்து தப்பித்து தாயகம் செல்ல நினைக்க, குவைத்தில் செயல்பட்டு வரும் தமுமுக மதிமுக வுக்கு தெரிய வர அவரை மீட்டு தூதரக பாதுகாப்பில் வைக்கப்பட்டது

தமுமுக -மதிமுக வினர்களின் தொடர் முயற்சிக்கு தூதரகத்தின் அதிரடி அழுத்தத்தால் முதலாளி நேரடியாக வர தயங்கி மற்றொரு இந்தியர் மூலம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க பிறகு ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று (29.11.2014)சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு நல்லபடியாக தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்

இவருக்கு ஒரு ஆண் குழந்தை யும் இரண்டு பெண் குழந்தை யும் இருக்கிறார்கள். தமுமுக – மதிமுகவினர்கள் நல்ல முறையில் தாயகம் அனுப்பி வைத்தனர்.

இவர் குவைத்திற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ளது 21.09.2014 அன்று தான் குவைத் வந்துள்ளார் 29.11.2014 இல் தாயகம் சென்றார். படத்தில் மதிமுக செம்பை விஜயன் ,தமுமுக நெல்லை பீர் மரைக்காயர் உள்ளிட்ட பலர் உள்ளனர்

Advertisement

Close