தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில் தடத்திற்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை!!!

Trainமக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பான தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில் வழித்தடத்திற்கு ரயில்வே அமைச்சகம் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என தஞ்சை எம்.பி.பரசுராமன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். இதுகுறித்து எம்.பி.பரசுராமன் நாடாளுமன்றத்தில் பேசுகையில், தஞ்சாவூர் முதல் பட்டுக்கோட்டை வரை புதிய ரயில்வே வழித்தடம் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மக்களுடைய நீண்ட கால எதிர்ப்பார்ப்பிற்குப் பிறகு சர்வே செய்து மதிப்பீடும் செய்யப்பட்டது. மதிப்பீட்டுத் தொகை மத்திய ரயில்வே அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டுக்கோட்டை முதல் மன்னார்குடி வரையிலான ரயில்வே வழித் தடத்திற்கான மதிப்பீட்டுத் தொகை ரயில்வேதுறை அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும் திருவாரூர், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டிணம், பேராவூரணி, காரைக்குடி அகலரயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் எம்.பி.பரசுராமன் மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

Close