அதிரை சி.எம்.பி லேன் சாலையின் குறுக்கே உள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்க கோரிக்கை!

734922_945125685537293_2446320403013291373_nஅதிரை வண்டிப்பேட்டை முதல் V.K.M.ஸ்டோர் செல்லும் சி.எம்.பி.லேன் சாலை கடந்த பல வருடங்களாக சிதைந்த நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இது குறித்து பல்வேறு கோரிக்கைகள் புகார்கள் வழங்கப்பட்டது. இருப்பினும் இது அதிரை பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தினால் இந்த சாலை அமைக்கும் பணி துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த சாலை அமைக்கும் பணி சில தினங்களாக துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சாலை நடுவில் ஒரு மின் கம்பம் இருக்கிறது அந்த மின் கம்பத்தை மாறி வேறு பக்கத்தில் வைக்க வேண்டும் என்று இஸ்லாமிய ஜனநாயக முன்னணி நகர செயலாளர் முஹம்மத் முகைதீன் அவர்கள் கோரிக்கை வைத்து உள்ளார்கள்.

இது குறித்து முஹம்மத் முகைதீன் நம்மிடம் கூறுகையில் : அதிரை வண்டிப்பேட்டை முதல் V.K.M.ஸ்டோர் செல்லும் சி.எம்.பி.லேன் சாலை அமைக்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மேலும் இந்த சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தை மாறி வேறு பக்கத்தில் வைக்கவேண்டும் ,இந்த மின்கம்பத்தால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடைஞ்சலாக இருக்கும் ஆகையால் இந்த மின் கம்பத்தை மாற்ற கோரி அதிரை மின்சார வாரியத்துக்கு கோரிக்கை வைத்து உள்ளோம்.கூடிய விரைவில் இது மாற்றப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது என்றார் .

cmp

Close