40 வருடங்களுக்குப் பின் வெளிநாடுகளுக்கு பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் அமெரிக்கா!

undergrad_mainimg40 வருடங்களாக அமலில் இருந்த பெட்ரோலிய பொருள் ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. இதனால் அந்த நாட்டின் எண்ணை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேலை வாய்ப்பு பெருகும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 40 வருடமாக நீடித்த பெட்ரோலிய பொருள் ஏற்றுமதி தடையை விலக்கிக்கொள்ளும், சட்டம், அமெரிக்க காங்கிரசில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது அதிபர் ஒபாமா அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது மட்டுமே பாக்கி என்பதால், விரைவில், தடை விலக்கல் அமலுக்கு வர உள்ளது.

தடையை விலக்கியது, வாடிக்கையாளர்கள், அமெரிக்க பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு போன்ற பல விவகாரங்களுக்கு நன்மை தரக்கூடியது” என்று செனட் உறுப்பினர் ஹெய்டி ஹெட்கம்ப் தெரிவிக்கிறார். “தடையை விலக்கியதால் கூட்டாளி நாடுகளுக்கு எண்ணை சப்ளை செய்வதில் நிலவிய சிக்கல்கள் தீருவதோடு, ரஷ்யா, வெனிசுலா, மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகள், ஆயில் ஏற்றுமதியில் பலம் பெறுவதும் தடுக்கப்படும்” என்கிறார் அவர். அதேநேரம், பாரீஸில் சமீபத்தில் முடிந்த தட்பவெப்ப மாநாட்டில் அமெரிக்கா அளித்த உறுதிமொழிப்படி, மாசுவை கட்டுப்படுத்துவது அவசியம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப ஆயில் உற்பத்தியில் பாதுகாப்பு வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் நிலவிய காலகட்டத்தில், இஸ்ரேல் பக்கம் அமெரிக்கா நின்றது. இதனால் அமெரிக்காவுக்கு எண்ணை பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அரபு நாடுகள் தடை விதித்தன. இதையடுத்து தற்சார்பை உறுதி செய்ய அமெரிக்கா தனது ஏற்றுமதிக்கு 1975ம் ஆண்டு தடை விதித்தது. கனடா போன்ற அண்டை நாடுகள் சிலவற்றுக்கு மட்டுமே அமெரிக்கா எண்ணை வளத்தை ஏற்றுமதி

Close