அதிரை மாணவி பாத்திமா பஹ்மிதா 10ஆம் வகுப்பு CBSE தேர்வில் சாதனை!

பத்தாம் வகுப்பு CBSE தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் இந்தியா
முழுவதும் வெளியாகின. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நடைபெறும் இத்தேர்வு SSLC
தேர்வினை விட மிகவும் கடினமானதாகும். இதில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
மதிப்பெண்கள் அடிப்படையில் இல்லாமல் க்ரேடு பாய்ண்டுகள் அடிப்படையில்
வழங்கப்படுகின்றன. இதில் A+ மற்றும் அதற்க்கும் மேல் பெறும் மாணவர்களுக்கு
அதிகபட்ச பாய்ண்டான 10 பாய்ண்டுகள் வழங்கப்பட்டு ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற
பாய்ண்டுகளின் அடிப்படையில் மொத்தமாக சராசரி பாய்ண்டுகள் நிர்ணயிக்கப்ப்படும்.

  திருச்சி காஜா நகரில்
உள்ள ஸமது CBSE பள்ளியில் நமதூர் டால்பின் ஹஜ் சர்வீஸ் உரிமையாளர் பதுருத்தீன்
அவர்களின் மகள் பாத்திமா பஹ்மிதா பயின்றார். இவர் நேற்று வெளியான CBSE
தேர்வு முடிவில் அறிவியல் மற்றும் கணிகம் ஆகிய பாடங்களில் A++ கிரேடும் பிற
பாடங்களில் A+ க்ரேடும் பெற்று அனைத்து பாடங்களிலும் அதிகபட்ச பாய்ண்டான 10
பாய்ண்டுகளை பெற்றுள்ளார். இதன் மூலம் இவருடைய மொத்த சராசரியும் 10 பாய்ண்டுகளை
பெற்றுள்ளது. இப்பள்ளியில் இவருடன் சேர்த்து இரண்டு மாணவிகள் மட்டுமே 10 சராசரி
புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடினமான CBSE தேர்வில் இம்மாணவி நிகழ்த்தியுள்ள சாதனை
பாராடுக்குறியது. இவருக்கு அதிரை பிறையில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்
தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close