அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தொழுகை நடத்திய முஸ்லிம்கள்!

usமுஸ்லிம்களை விமர்ச்சித்த அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் டிரம்பின் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழுகை நடத்தி டிரம்பை அமெரிக்க முஸ்லிம்கள் அதிரவைத்தனர். அமெரிக்க குடியரசு கட்சியின் சார்பில் ஹில்லாரி கிளிண்டனை எதிர்த்து அதிபர் வேட்பாளராக போட்டியிடுபவர் டிரம்ப். இவர் வேட்பாளாராக அறிவிக்க பட்ட நாளிலிருந்தே முஸ்லிம்களுக்கு எதிராக கடும் விமர்ச்சனங்களை முன்வைத்து வருகிறார். அவரது விமர்சனத்தின் உச்சபட்சம் அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதாகும்.

அவரின் இந்த கடும் போக்கை கண்டித்து அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்தை டிரம்ப் தடை செய்வது இருக்கட்டும். முதலில் அவரின் அலுவலுகத்தை நாங்கள் முற்றுகையிட்டு தொழுகை நடத்த போகிறோம். டிரம்புக்கு துணிவு இருந்தால் தடுத்து நிறுத்தட்டும் என்ற முழக்கத்தோடு டிரம்பின் தேர்தல் அலுவலுகத்தை அமெரிக்க முஸ்லிம்கள் முற்றுகையிட்டு தொழுகை நடத்தினார்கள். அவரின் அலுவலுகத்தை நாங்கள் முற்றைகையிட்டதையே தடுக்க முடியாத இவரால் ஒருபோதும் அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்தை தடுக்க முடியாது என்ற அறிவிப்போடு முஸ்லிம்கள் கலைந்து சென்றனர்.

Close