பட்டுக்கோட்டையில் புதிய ASP யாக அரவிந்த் மேனன் பதவியேற்பு

amபட்டுக்கோட்டையில் இன்று புதிய ஏ.எஸ்.பியாக அரவிந்மேனன் பொறுப்பேற்றார். புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஏஎஸ்பி அரவிந்த்மேனன், பொதுவாகவே போலீஸ் மீது பொதுமக்களுக்கு நேர்மறையான அபிப்ராயம் இருக்கும் , அதனை போக்கும் வகையில் நான் ஒருவர் நினைத்தால் முடியாது என்பதல் எனது கட்டுப்பாட்டிற்குள் உள்ள காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் அதற்கான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்.

காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வருபர்வகளை மரியாதையாக நடத்தவும், காவல்நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை இல்லாத பட்சத்தில் என்னை அனுகி புகார் தெரிவிக்கவும் வழிவகை செய்யப்படும், குற்ற நடவடிக்கைகள் குறைத்திட முக்கியத்துவம் கொடுக்கப்படும், இந்த ஒருவார காலம் முடிந்து நகரின் போக்குவரத்து துறையினர், வர்த்தக துறையினர் என அனைவரையும் அழைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்த முடிவுசெய்துள்ளேன்.

பொதுமக்களின் நலன் முக்கியமாக கொண்டு காவல்துறை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் அறிமுகப்படுத்தியுள்ள ஹலோ போலீஸ் மற்றும் புதிதாக பொருப்பேற்றுள்ள ஏஎஸ்பியின் அனுகுமுறை பொதுமக்களிடையே காவல்துறை மீதான பெரும் நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Close