வங்கிகளுக்கு டிச.24 முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை

stock-vector-bank-holiday-grunge-rubber-stamp-on-white-vector-illustration-173912543-450x380மிலாடி நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் 2-வது சனிக்கிழமை ஆகியவற்றை முன்னிட்டு வங்கிகளுக்கு டிசம்பர் 24 முதல் டிசம்பர் 27 வரை 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம்களில் பணத்தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மிலாடி நபி பண்டிகை டிசம்பர் 24-ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 25-ம் தேதி வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதாலும், அதற்கடுத்த நாள் 2-வது சனிக்கிழை என்பதாலும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஏடிஎம் மையங்களில் போதிய பணத்தை இருப்பு வைக்க வங்கி நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதனால், ஏடிஎம் மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்படாது என தெரிகிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை தொடர்ந்து, தொடர் விடுமுறை ரத்தாக வாய்ப்பு உள்ளதாக கனரா வங்கி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Close