சென்னை-திருச்சி விமானம் நான்கு நாட்களுக்கு ரத்து!!!

Ailinegroupbookingjetairwaysசென்னை-திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் தனியார் விமானம் 4 நாட்களுக்கு நிர்வாக காரணங்களால் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுளளது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் ஒரே உள்நாட்டு சேவை ஜெட் ஏர்வேஸ் விமான சேவையாகும். தினசரி பகல் 12.30 மணிக்கும், பிற்பகல் 3.40 மணிக்கும், இரவு 10 மணிக்கும் என் 3 முறை சென்னை – திருச்சி இடையே இயக்கப்பட்டு வருகின்றது.

இந்தவிமானம் டிசம்பர் 19, 21, 26, 27 ஆகிய 4 தேதிகளில் பிற்பகல் 3.10-க்கு திருச்சி வந்து 3.40க்கு திருச்சியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் விமானம் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது.

Close