இந்தியாவில் கடலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்!(படங்கள் இனைப்பு)..

5அலைகள் மோதும் கடலுக்குநடுவே ஒரு அதிசய விமானநிலையம் அமைந்திருக்கிறது.
அதுவும் நமது இந்தியாவில்தான் இப்படியொரு ஆச்சரிய விமான நிலையம்.

விமானம் தரை இறங்கச்சற்று நிமிடங்களுக்குமுன்,விமானத்தில் இருந்து பார்த்தால், கடல்தான்தெரியும். முதன் முதலாகப் பார்ப்பவர்களுக்கு திகிலுடன் கூடிய ஆச்சரிய நிகழ்வாக இது தோன்றும்.ஆனால், அடிக்கடி சென்று வருபவர்கள் மட்டும்கடலின் அழகை ரசிப்பார்கள். சுற்றிலும் கடல் நீர் சூழ்ந்திருக்கும் இந்த ரன்வே, லட்சத்தீவில் உள்ள அகட்டி (Agatti) விமான நிலையமாகும்.மத்திய அரசால் இயங்கும் சுற்றுலாத் தலம்.airport_630_473_70

கப்பல்களில் மட்டுமே செல்ல முடிந்த அகட்டி தீவில், 1987-ல் விமான நிலையம் கட்டத்தொடங்கி, 1988-ல் முடிவடைந்து, விமான சேவை தொடங்கியது.விமானங்கள் இறங்க, 45ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட ரன்வேயின் நீளம், 1,204 மீட்டர்கள். அகலம், 360 மீட்டர்களே.VeavW

பயணிகள் இங்கு இறங்கியதும், கப்பல்கள் மூலம் மற்ற தீவுகளுக்குச் செல்லலாம். சுற்றிலும் கடல் நீர் இருக்கும். இந்தத் தீவுக்கு, பெங்களூரு,கொச்சியில் இருந்து சிறிய வகை விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன…

Close