ஜமாலு..! கமாலு..! – அதிரையில எந்த கலியாணத்துக்கு போறது…

jamaalu kamaaaluஜமாலு: அஸ்ஸலாமு அலைக்கும் கமாலு, எப்புடி இருக்கா?

கமாலு: வ அலைக்குமுஸ்ஸலாம் ஜமாலு! நல்லா இருக்கேன். நீ எப்புடி இருக்கா?

ஜமாலு: நல்லா இருக்கேன், துபாய்ல இருந்து எப்ப வந்தா?

கமாலு: முந்தா நேத்து தான் வந்தேன்.

ஜமாலு: என்ன சொல்லா கொல்லாம திடீர்னு வந்திருக்கா

கமாலு: ஆமாம் மச்சான், தம்பிக்கு கலியாணம் அதான் ஊருக்கு ஒரு மாச கட்டத்துக்கு வந்தேன்.

ஜமாலு: அது சரி, என் மச்சி மொவனுக்கு நாளைன்னைக்கு கலியாணம் மச்சான்.

கமாலு: அமா? ஊருல எத்தண கலியாணம்

ஜமாலு: 80 கலியாணம் னு சொல்ராங்க, என்ன பண்ணுரது.

கமாலு: நாளைக்கு மட்டும் நாலு கலியாணம் நடக்குதாம், எல்லோரும் பாசமா வந்து கூப்புட்டு போறாங்க, யாரு வூட்டு கலியாணத்துக்கு போறதுண்டு ஒரே கொழப்பமா ஈக்கிது மச்சான்.

ஜமாலு: எங்க குடும்பத்துலயே ஆறு கலியாணம், அதுல ரெண்டு ஒரே நாளைல நடக்குது, இவங்க வீட்டுக்கு போனா அவங்க கோச்சுக்குவாங்க, அவங்க வீட்டு போகலன்னா இவங்க கோச்சுக்குவாங்க..

கமாலு: எனக்கும் அதே நிலைமை தான், எங்க சொந்தகாரவங்க ஃப்ரண்ட்ஸ் வீடு எல்லாருக்கும் கலியாணம் அடுத்தடுதது வருது….

ஜமாலு: நம்ம ஊர் மக்கள் ஒன்னா பேசி காயல்பட்டினம் போன்ற ஊர்களில் நடப்பது ஒன்னா வச்சு விருந்து எல்லாம் முடிச்சா, செலவு பாதி குறையும்…அந்த செலவ ஊருல உள்ள நல்ல விசயங்களுக்கு செலவு செய்யலாம்

கமாலு: நல்ல யோசனை தான்….என்னா பண்ணுரது…நம்ம ஊருல ஒத்துமை இல்ல, அவரவர் வேற வேற கொள்கை ல இருக்குறாங்க…யாருமெ சம்மதிக்க வாய்ப்பிலே…

ஜமாலு: ஆமாம், நம்ம மக்கள் ட ஒத்துமை இல்லாத வரைக்கு இது நடக்காது..

கமாலு: அனா இப்பொ சில விசயத்துல நம்ம ஊரு இளைஞர்கள நெனச்சா சந்தோசமா இருக்குது…நெறய பேரு திருந்தி வரதட்சனை வீடு லாம் வேண்டாம் நு சொல்லிடாங்களாம்…

ஜமாலு: ஆமாம் மச்சான் நம்ம கலியாணம் முடிக்கும் போதுலாம், பொண்ணு வீட்டுல எவ்வளவோ வாங்குனோம், அல்லாஹ் நம்மள மன்னிக்கனும்…ஆனா இப்போ பாத்தா…எளிமையா முடிக்குறாங்க….வரதட்சனை இல்லாம மஹர் போட்டு கலியாணம் பன்னுரங்க…

கமாலு: ஊரு ஓரளவு முன்னேறிடுச்ச…அதுலாம் நல்லது தான் அப்புடின்னாலும் நம்ம ஊரு இளைஞர்கள் திருமணமான இரவு பெண் வீட்டாரை தவிக்க வைத்து மாப்பிளையை கடத்தி சென்று நள்ளிரவு 12, 01 மணிக்கு தான் வீட்டுக்கு விடுராங்களாம், இதனால் முதல் நாளே மாப்பிள்ளை மீது பெண் வீட்டாருக்கு தவறான எண்ணங்கள் வர வாய்ப்பு இருக்கு…என் தம்பிட்ட அதான் கண்டிச்சு சொல்லிட்டேன்…இந்த தப்புலாம் பண்ண கூடாதுன்னு…சரி மச்சான் கூப்பாடு வேலை ஈக்கிது…

வர 26ஆம் தேதி அஸர்க்கு அப்பரம்…… பள்ளியில கலியாணம், இரவு எங்க ஊட்டுல வலிமா, குடும்பத்தோட வந்துரு..அஸ்ஸலாமு அலைக்கும்

ஜமாலு: கண்டிப்பா வந்துரேன் மச்சான், வ அலைக்குமுஸ்ஸலாம்

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Close