அதிரைக்குள் திடீரென புகுந்து அட்டகாசம் செய்யும் அவர்கள்!

tensionஅதிரைக்குள் சமீப காலமாக திடீரென கும்பலாக நுழைந்து சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக மலைப்பகுதிகளில் வாழும் இவர்கள் தற்போது அதிரைக்குள் நுழைந்து அட்டகாசம் செய்ய காரணம் என்ன? இவர்களால் பெரிதும் அவதியடைவது வீட்டில் உள்ள பெண்கள் தான். இவர்கள் வீட்டிற்குள் எப்படி வருகிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் வந்து சில நிமடங்களில் ஏதாவது ஒன்றை தூக்கி சென்றுவிடுகின்றார்கள் என புகார்கள் வருகின்றன.

ஆனால் இவர்கள் வரும் நேரம் குழந்தைகள் சிறுவர்கள் குஷியடைந்து வேடிக்கை பார்க்கின்றனர். இவர்கள் யார் என்று தெரியவில்லையா? இவர்கள் வீடுகளுக்குள் சென்று முட்டை, தக்காளி போன்றவற்றை திருடி திண்கின்றனர். இன்னும் புரியவில்லையா!!!!! இந்த குரங்குகள் தொல்லை தாங்க முடியவில்லையாம், குறிப்பாக நடுத்தெரு, புதுமனைத்தெரு, காலியார் தெரு, மேலத்தெரு, சி.எம்.பி லேன் பகுதிகளில் இவர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என புகார் வந்துள்ளது.

இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து குரங்குகளின் அட்டகாசத்தை அடக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Close