அதிரையில் விடிய விடிய பெய்து வரும் கனமழை !

புதன்கிழமையன்று தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கையை ஒட்டிய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலை கொண்டிருந்தது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சற்று நகர்ந்து தெற்கு இலங்கைக்கு அருகில் தற்போது நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழகம், புதுவையின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழையோ மிக பலத்த மழையோ வெள்ளிக்கிழமை பெய்யும். உள்மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து அதிரையில் நேற்று காலை முதல் லேசான தூரல் மழை பெய்து வந்தது .இதைதொடர்ந்து நேற்று இரவு முதல் தற்போது வரை அதிரையில் தொடர் மழை பெய்து வருகிறது.இந்த மழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது

Advertisement

Close