மீலாது விழா கொண்டாடுவது ஹராம்! சவூதி கிராண்ட் முப்தி ஷேக் அப்துல் அஜீஸ் எச்சரிக்கை!

மீலாது விழா ” ஹராம்” _கிராண்ட் முஃப்தி ஷேய்க் அப்துல் அஜிஸ் அல்-ஷேய்க்! அவர்களின் எச்சரிக்கை!

சவுதி அரேபிய தலைநகர் ரியாதில் உள்ள இமாம் துருக்கி பின் அப்துல்லாஹ் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா (பிரசங்கத்தில்)  கிராண்ட் முஃப்தி ஷேய்க் அப்துல் அஜிஸ் அல்-ஷேய்க் உரையில் “மீலாது விழா” வை இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக கொண்டாடுகிறார்கள் என்று குறிப்பிட்டு மீலாது விழா கொண்டாடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

நபிகளார் ஸல். அவர்கள் வாழ்ந்த  காலத்திலேயே முழுமை பெற்ற இஸ்லாமிய மார்க்கத்தில் மீலாது விழா என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதை  குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார். ‘நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ என்று கூறுவீராக!(3:31)  என்ற அல்லாஹ்வின் வசனத்தைக் கூறி விளக்கம் அளித்தார்.

நபிகளார் ஸல், அவர்கள் செய்யாத, சொல்லாத, அங்கீகரிக்காத, செயலை மார்க்கத்தின் பெயரால் செய்யாமல் தடுத்துக் கொள்வது முஸ்லிமின் பண்பு. அதிலும் அல்லாஹ்வின் தூதர் ஸல். அவர்களுக்கே மீலாது விழா (பிறந்த நாள் விழா) கொண்டாடலாமா? என்பதை மார்க்கம் அனுமதிக்காத இச்செயலை செய்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

Close