சவூதி அரேபியாவில் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து! 25 பேர் மரணம்!

2737274333சவுதி அரேபியாவின் ஜிஸான் நகரில் இயங்கி வந்த மருத்துவமனை ஒன்றில் இன்று காலையில் நேர்ந்த பயங்கர தீ விபத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.

சவூதி அரேபியா தலைநகரும் முக்கிய வணிக நகருமான ஜிஸான் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையின் முதல்தளத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தளத்தில் தான் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேறு சிகிச்சைப் பிரிவுகள் இயங்கி வந்தன.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 25 பேர் தீயில் சிக்கி பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகள் உள்ளிட்ட பலர் இறந்துள்ளதாக சவூதி அரேபிய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 107 பேர் காயமடைந்துள்ளதாகவும் ராணுவத்தின் தலைமை இயக்குநர் கூறினார்.

தீ விபத்தானது மருத்துவமனையில் முதல் தளத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் அவசர சிகிச்சை பிரிவும், குழந்தை நல பிரிவும் உள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை.

Close