தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சகல வசதிகளுடன் தொழுகைக்காக சிறப்பு இடம்!

mmmதஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது மீனாட்சி மிஷன் என்னும் பிரபல தனியார்  மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் பல ஊர், மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பல வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனையில் இஸ்லாமியர்களும் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு சிகிச்சை பெறும் இஸ்லாமியர்கள் தொழுவதற்கு வசதியாக அழகான தொழுகை அறை அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் நான்காவது தளத்தில் அமைந்துள்ள இந்த தொழுகை அரையில் முஸ்லிம்கள் அமர்ந்து ஓதுவதற்கு வசதியாக குர்ஆண்களும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்க்காக செல்லும் நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Close