மலைசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 300 கிராம் தங்கம் திருச்சியில் பறிமுதல்!!

trichy-airport

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 7.64 லட்சம் தங்கத்தை சுங்க்கத்துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

சென்னை வழியாக மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமான பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புள்ளாணி முஸ்லிம் தெருவைச் சேர்ந்த மு. சீனிபக்ருதீன் (43) என்பவரின் உடைமைகளை சோதித்தபோது, அவர் ரூ. 7.64 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை கடத்திவந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Close