தமிழர் மறுவாழ்வுக்கு முஸ்லிம்களின் ஆதரவு தேவை: சிறீசேனா!!

imagesஇலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் ஆதரவு தர வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா அழைப்பு விடுத்துள்ளார்.
மீலாது நபி பண்டிகையையொட்டி அவர் வியாழக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
சகிப்புத்தன்மை, கருத்தொற்றுமை, மறுவாழ்வு ஆகிய பண்புகளைக் கொண்ட தேசமாக இலங்கையைக் கட்டமைப்பதற்கு, நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்றக் கூடியவர்கள் தங்களது பங்களிப்பை அளிப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இதுதான் நாட்டை வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் செல்லும்.
பண்முகத்தன்மை கொண்ட ஓர் சமூகத்தின் ஒற்றுமைக்காக முகமது எழுதிய “மதீனா சாசனம்’ என்ற நூல் இன்றைய காலகட்டத்தில் உள்ள பிரச்னைகளுக்கும் தீர்வு அளிப்பதாக அமைந்துள்ளது என்று சிறீசேனாவின் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது

Close