அமெரிக்காவில் புயல்: 14 பேர் பலி!!!

images (2)

அமெரிக்காவின் தெற்கு மற்றும் வடமத்தியப் பகுதி மாகாணங்களில் புதன்கிழமை வீசிய புயல் மற்றும் சுழல் காற்றுக்கு 14 பேர் பலியாகினர்.

அந்த நாட்டின் இல்லினாய்ஸ் முதல் ஆலபாமா வரையிலான 6 மாகாணங்கள், இந்தப் புயலால் பாதிக்கப்பட்டன.

தெற்குப் பகுதியைச் சேர்ந்த மிஸிஸிபி மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த மாகாணத்தில், சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்ததனர்.

வேகமாக வீசிய சுழல்காற்றில் சிறுவன் சென்ற கார் தூக்கி வீசப்பட்டதால், அந்தச் சிறுவன் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

மிஸிஸிபியின் 7 மாவட்டங்களில் பேரிடர் கால அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக மின் கம்பங்கள் விழுந்ததால் மாகாணத்தில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் வீசிய இந்தப் புயலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

புயலின் தீவிரம் ஓய்ந்தாலும், தென்கிழக்கு மாகாணங்களில் வெள்ள அபாயம் தொடர்ந்து நீடிப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Close