சீனாவில் தொலைக்காட்சியில் நேரலையாக செய்தி வாசிக்கும் ரோபா!!!

4221396001_3643427370001_Robot-newsreader

முதல் முறையாக சீன தொலைக்காட்சியில் ஒரு ரோபோ நேரலையாக வானிலை அறிக்கை வாசிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இது அந்நாட்டில் தொலைகாட்சி அறிவிப்பாளர்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஷாங்காய் டிராகன் டி.வி.யில் வானிலை அறிக்கை வாசிக்கிறது. அந்த ரோபோவுக்கு ‘ஸியோக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இனிமையான பெண் குரலில் அச்செய்தி வெளியாகிறது.

முதன் முறையாக பேசிய ‘ரோபோ’ ‘‘வானிலை அறிக்கையை வாசிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என தனது இனிமையான குரலில் தொடங்கியது. இது அங்கு பணிபுரிபவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. டி.வி. துறையிலும் ‘ரோபோ’க்களின் ஆதிக்கம் தொடங்கி விட்டதால் அங்கு பணிபுரியும் அறிவிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள உணவு விடுதிகளில் மருத்துவமனைகளில் ரோபோக்கள் பணியாற்றிவரும் இந்நிலையில் ‘ரோபோ’ தற்போது செய்தி வாசிப்பாளராகவும் தனது பணியை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Close